"ஜனநாயகத்தின் நான்காவது தூணைப் பாதுகாப்போம்": கலாநிதி. வி.ஜனகன்
 Local News    by VJ Media  

  15        0

"ஜனநாயகத்தின் நான்காவது தூணைப் பாதுகாப்போம்": கலாநிதி. வி.ஜனகன்

by VJ Media       2020-05-03     
 English    Tamil  

2004ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியளார் நடேசன் உட்பட அனைத்து தமிழ் பேசும் ஊடகவியாளர்கள் தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. வடமாகாணத்திலிருந்து நாடாளுமன்றம் வந்த 60இற்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் இப்பட்டியலைக் கையளித்திருந்தார்கள். ஆனால் அதற்கும் எந்த விதமான உரிய செயற்பாடுகளும் கடந்த அரசாங்கத்திலும் இடம்பெறவில்லை" என்ற தனது ஆதங்கத்தை, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திர தினமான இன்று, அதுதொடர்பில் வௌியிட்ட ஊடக அறிக்கையிலேயே கலாநிதி ஜனகன், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறுகையில்,

“இன்று, உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் வேளையில் இலங்கையில் இரண்டு தசாப்தகாலமாக ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் பாதுகாக்கப்படுவதில்லை என்பது மிக வருத்தப்படும் நிலையாகும்.


இது தொடர்பான முழுமையான செய்தி, ஏனைய செய்தி சேவைகளிலிருந்து...


  15        0

Other News (Non Local News)